NEW

Wednesday 1 November 2017

ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்யலாமா?

ஆண்ட்ராய்ட் மொபைலை ரூட் செய்யலாமா?

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களை ரூட் (Root) செய்யலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதற்கான விடையைப் பார்க்கலாம்.

உங்களுடைய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் உங்களுக்கு அவசியமில்லாத அப்ளிகேசன்கள் பல இருக்கும். அதனால், நீங்கள் விரும்பும் அப்ளிகேசன்களை இன்ஸ்டால் செய்ய போதிய மெமரி இல்லாத நிலை ஏற்படக்கூடும்.

டைட்டானியம் பேக்-அப் (Titanium Backup) அப்ளிகேஷனை பயன்படுத்த முடியாதத இயலாது. அதனை பயன்படுத்த ரோம் மேனேஜர் (ROM Manager) மூலம் விரும்பும்படி பிளாஷ் ரோம் மாற்றும் வசதி இருக்காது.

ஆனால் மொபைலை ரூட் செய்வதன் மூலம் இது போன்ற வசதிகளை பெற முடியும். உங்கள் மொபைல் போனை முற்றிலும் உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

ரூட் செய்வதால் என்ன ஆகும் என்றால், உங்களுக்கு சூப்பர் யூசர் பவர் (Super User Power) கிடைக்கும். அதாவது, மொபைலின் தயாரிப்பாளர் என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் நீங்களும் செய்ய முடியும்.

ரூட் செய்வதற்கான பிரத்யேக அப்களிகேஷன் மூலமாக இதனைச் செய்யலாம். அல்லது கணிணி உதவியுடன்கூடச் செய்ய முடியும். ஆனால், இதில், முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம், ரூட் செய்யப்பட்ட மொபைல் வாரண்ட்டியை இழந்துவிடும். பெரும்பாலான நிறுவனங்கள் ரூட் செய்த மொபைலின் வாரண்ட்டியை ரத்துசெய்வதில் உறுதியாக இருக்கின்றன. வாரண்ட்டி அறிக்கையிலும் இதனை அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

இருப்பினும், ரூட் செய்வதால் கிடைக்கும் பலன்கள் பல என்பதால் வாரண்டியை தியாகம் செய்து பலர் ரூட் செய்கிறார்கள். ரூட் செய்த மொபைலைகூட மீண்டும் பழையபடி ஆக்க அன்-ரூட் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment