NEW

Wednesday 1 November 2017

உங்க ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுகிறது உஷார்:

உலகளவில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது, ஆனால் இதை பயன்படுத்துபவர்களுக்கு முக்கிய பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
அதில் ஒன்று ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்படுவது! சில விடயங்கள் மூலம் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யபடுவதை கண்டறியலாம்.
அப்டேட்
நமது ஸ்மார்ட்போனை யூஸ் செய்யாத போதும் சில சமயம் போன் சூடாகிவிடும். காரணம் நாம் அறியப்படாத ஆப் ஒன்று இயங்கிகொண்டிருக்கும், இதுபோன்ற பிரச்சனையால் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது.
ஸ்மார்ட்போன் புதிய அப்டேட் பெற்றிருப்பதை உறுதி செய்தால் இப்பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.
எதிரொலி
ஸ்மார்டபோன்களில் கால் அழைப்புகள் போது தேவையில்லாத சத்தம் அல்லது எதிரொலி போன்றவற்றினால் ஹேக் பிரச்சனைகள் வரும், மேலும், நாம் இருக்கும் இடத்தை கூட அடுத்தவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
சுவிட்ச் ஆப்
ஸ்மார்ட்போன் தானாகவே ஸ்விட்ச் ஆஃப் மற்றும் டயல் செய்தால் ஹேங் செய்யப்படுகிறது என அர்த்தமாகும்.

சாப்ட்வேர்
சில சமயங்களில் ஸ்மார்ட்போனை ஆஃப் செய்ய முடியாது, அது போன்ற நேரத்தில் தேவையில்லாத ஆப் இயங்கி கொண்டிருக்கும். இதை தவிர்க்க சாப்ட்வேரினை உரிய நேரத்தில் அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.
ப்ளே ஸ்டோர்
கூகுள் பிளே ஸ்டோரில் பெரும்பாலான செயலிகள் இலவசம் தான். அவற்றை பயன்படுத்தும் முன்பு நம்பத்தன்மையை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
தெரியாத எண்கள்
நமது ஸ்மார்ட்போன்களில் சமீபத்திய அழைப்புகளில் தெரியாத தொலைபேசி எண்கள் வந்தால் ஹேக் செய்வதற்க்கு வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment