NEW

Wednesday 1 November 2017

வீட்டு நெட்வொர்க்: பாதுகாக்க சில டிப்ஸ்

வீட்டு நெட்வொர்க்: பாதுகாக்க சில டிப்ஸ்

இந்தியாவில் இண்டர்நெட் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இண்டர்நெட் பாதுகாப்பு அவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் இண்டர்நெட் இணைப்பை பயன்படுத்தும் அனைவரும் சைபர் சார்ந்த அச்சுறுத்தல்களில் பாதிக்கப்படும் அபாயம் அதிகமாகியுள்ளது.
 
இண்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் பாதிக்கப்படலாம் என்ற வகையில், உங்களது நெட்வொர்க்களை ஹேக்கர்கள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். வீட்டில் நீங்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்கை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

பெயரை மாற்ற வேண்டும்:

முதலில் உங்களது வைபை பெயரை மாற்ற வேண்டும், பெயரை மாற்றுவது ஹேக்கர்களுக்கு நீங்கள் பயன்படுத்தும் ரவுட்டரை அறிந்து கொள்வதில் சிரமத்தை ஏற்படுத்தும். நீங்கள் பயன்படுத்தும் ரவுட்டர் சார்ந்த தகவல்களை ஹேக்கர்கள் அறிந்து கொண்டால், அவர்களால் மிக எளிமையாக உங்களது நெட்வொர்க்கில் நுழைய முடியும்.

நெட்வொர்க் என்க்ரிப்ஷன்:

வயர்லெஸ் நெட்வொர்க்களில் பல்வேறு என்க்ரிப்ஷன் மொழிகள் இடம்பெற்றுள்ளன, WEP, WPA அல்லது WPA2. இதில் WEP 1990களில் உருவாக்கப்பட்டது. இதனால் இதனை மிக எளிமையாக ஹேக் செய்ய முடியும். என்க்ரிப்ட் செய்ய தலைசிறந்த மொழி WPA AES தான். அனைத்து வயர்லெஸ் நெட்வொர்க்களும் சப்போர்ட் செய்யும் மொழியாகவும் WPA AES இருக்கிறது.

ரவுட்டர் வைக்கும் இடம்:

வீட்டில் ரவுட்டர் வைக்கும் இடம் முக்கிய அங்கம் வகிக்கிறது. எப்போதும் வைபை ரவுட்டர்களை வீட்டின் நடு மையத்தில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது சிக்னல் சீராகவும், அனைத்து அறைகளுக்கும் பரவும். இத்துடன் சிக்னல் வெளியேறும் அளவும் குறைவாக இருக்கும். 

ரிமோட் அக்சஸ்:

பெரும்பாலான ரவுட்டர்கள் தங்களது இன்டர்ஃபேசினை இணைக்கப்பட்ட சாதனத்தில் இருந்து இயக்க வழி செய்கிறது என்றாலும் சில ரவுட்டர்கள் ரிமோட் சிஸ்டம்களில் இருந்தும் இயக்க வழி செய்யும். இதை பயன்படுத்தி ஹேக்கர்களால் மிக எளிமையாக உங்களது நெட்வொர்க்கில் நுழைய முடியும். 

ரிமோட் அக்செஸ் ஆப்ஷனை செயலிழக்க செய்தால் மற்றவர்கள் உங்களது நெட்வொர்க்கில் நுழைவதை தடுக்க முடியும். இதை செய்ய வெப் இன்டர்ஃபேஸ் சென்று ரிமோட் அக்செஸ் அல்லது ரிமோட் அட்மினிஸ்ட்ரேஷன் ஆப்ஷன் சென்று மாற்ற முடியும்.

No comments:

Post a Comment